ஆமைகளில் மறைந்திருக்கும் பாம்பு… 15 நொடியில் கண்டுபிடித்தால் நீங்க சாதனையாளர்

முடிவில்லாத புதிராக மூளையைக் குழப்பி முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். கண்டுபிடித்தால் நீங்கள் சாதனையாளர்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமானதாகவும் தெரியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக இருக்கிறது.

குதிரையைக் கண்டுபிடியுங்கள், யானையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள், பட்டாம்பூச்சியைக் கண்டுபிடியுங்கள் என்று சவால்விடும் சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

அந்த வகையில், ஆமைகள் கூட்டமாக இருக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பை கண்டுபிடியுங்கள் என்பதே அனைவருக்குமான சவால். கண்டுபிடித்தால் நீங்கள் சாதனையாளர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள்.

இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படைப்புகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் வரைந்தது. இந்த படத்தில் கூட்டமாக இருக்கும் ஆமைகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதை 15 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்களும் சாதனையாளர்தான்.

பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் கீழ்ப் பகுதியில் பாம்பைத் தேடுங்கள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் விடையைத் தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.