ஜகா வாங்கிய டிக்டாக்.. அமெரிக்கா, ஐரோப்பிய திட்டங்கள் கைவிட்டது..!

டிக்டாக் நிறுவனத்தின் கூட்டத்தில் இருந்து கசிந்த 12க்கும் அதிகமான பதிவுகள் அமெரிக்க டிக்டாக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்க டிக்டாக் பயனர்கள் அதாவது வாடிக்கையாளர்கள் பற்றிய தனிப்பட்ட தரவுகளை மீண்டும் மீண்டும் ஆக்சஸ் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டிக்டாக் முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளது.

லைவ் காமர்ஸ் வர்த்தகம்

சீனாவில் மிகவும் பிரபலமான லைவ் காமர்ஸ் வர்த்தகத்தை உலகின் பிற நாடுகளுக்கும் கொண்டு செல்ல சீன நிறுவனங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், ஷாட் வீடியோ செயலியான டிக்டாக் -ம் செயல்பட்டு வருகிறது.

QVC நிறுவனம்

QVC நிறுவனம்

டிக்டாக் தனது லைவ் காமெர்ஸ் வர்த்தகத்தை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பிரிட்டன் நாட்டின் QVC நிறுவனத்துடன் கைகோர்த்த நிலையில், நிர்வாகத்தில் ஏற்பட்ட உள் பிரச்சனை மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற முடியாத நிலையில் இத்திட்டத்தைக் கைவிட்டது.

TikTok Shop
 

TikTok Shop

இந்த லைவ் காமர்ஸ் வர்த்தகத்தை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யச் சீன நிறுவனமான டிக்டாக், TikTok Shop என்ற புதிய நிறுவனத்தைப் பிரிட்டனில் உருவாக்கியது. இந்த நிறுவனத்தில் பிராண்ட்ஸ் மற்றும் influencers லைவ் வீடியோ மூலம் பொருட்களை விற்பனை செய்வார்கள், இந்த லைவ் வீடியோ டிக்டாக்-ல் ஓளிப்பரப்படும்.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்-ன் எதிர்காலம் இதுதான் எனக் கூறப்படும் லைவ் காமர்ஸ் வர்த்தகத்தை டிக்டாக் உலக நாடுகளில் விரிவாக்கம் செய்ய முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. டிக்டாக் ஐரோப்பா. அமெரிக்காவை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அறிமுகம் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.

டிக்டாக் தடை

டிக்டாக் தடை

அமெரிக்காவில் வெளியான டிக்டாக் மீட்டிங் தரவுகளைத் தொடர்ந்து டிக்டாக்-ஐ ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் உள்ள குடியரசுக் கட்சி ஆணையர், ஆப்பிள் மற்றும் கூகுள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆப்பிள் CEO டிம் குக் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கு பிரெண்டன் கார் (Brendan Carr) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TikTok abandons live ecommerce initiative Tiktok shop expansion in Europe and US

TikTok abandons live ecommerce initiative Tiktok shop expansion in Europe and US ஜகா வாங்கிய டிக்டாக்.. அமெரிக்கா, ஐரோப்பிய திட்டங்கள் கைவிட்டது..!

Story first published: Tuesday, July 5, 2022, 23:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.