வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டம் காரணமாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரடியாக வந்து, தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
தற்போது வரை அதிமுகவில் 20065 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர் 2240 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
இன்று காலை ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், தனது ஆதரவாளருடன் நேரடியாக வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2242 ஆக அதிகரித்துள்ளது.