யார் முதலிடம்? கன்சர்வேடிவ் கட்சி பிரதமரை தெரிவு செய்யும் முறை… விரிவான தகவல்


பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை கன்சர்வேடிவ் கட்சி எவ்வாறு தெரிவு செய்ய இருக்கிறது என்பது தொடர்பிலும், யார் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் விரிவான தகவல் வெளியாகியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பொறுப்பில் இருந்து போரிஸ் ஜொன்சனை வெளியேற்றும் நடவடிக்கையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தற்போது வரையிலான தகவலின் அடிப்படையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலிடத்தில் உள்ளார்.
இவருடன் 9கும் மேற்பட்டவர்கள் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் என்ற கனவில் போட்டியில் உள்ளனர்.

Rishi Sunak

இரண்டாவது மற்றும் அதன் அடுத்த நிலைகளில் பென்னி மோர்டான்ட், லிஸ் ட்ரஸ், டாம் துகெந்தட், நாதிம் ஜஹாவி மற்றும் கெமி படேனோச் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர்.

ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் 1922 குழு விவாதத்தின் அடிப்படையில் கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றே கூறப்படுகிறது.
இதனால் சில போட்டியாளர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே நாக் அவுட் ஆகிவிடுவார்கள் என தெரிய வந்துள்ளது.

முதல் சுற்றில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கை பெற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இதில் 30கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் முதல் சுற்றை கடந்துவிடலாம்.

அதன் பின்னர் எஞ்சிய வேட்பாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இறுதியில் இருவர் மட்டுமே எஞ்சியிருக்க, அவர்களுக்கு கட்சியின் சிறப்பு உறுப்பினர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

Penny Mordaunt

இந்த நிலையில், தாம் யாருக்கு ஆதரவளிக்க இருப்பதை வெளிப்படையாக கூற முடியாது என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் நாட்டின் பிரதமர் யார் என்பது தெரிந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார் அவர்.

முதல் சுற்று முடிவில் ரிஷி சுனக் 33 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பென்னி மோர்டான்ட் 20 வாக்குகள் பெற்றுள்ளார். எஞ்சியவர்கள் அனைவரும் 16 மற்றும் அதற்கும் கீழ் எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுள்ளனர்.
இதனால் இரண்டாவது சுற்று பென்னி மோர்டான்ட் மற்றும் ரிஷி சுனக் இடையே நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.