முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் சோர்வு மற்றும் இருமல் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனைக்காக, சென்னை எம்.ஜி.எம்., மருத்துமவனைக்கு நேற்று இரவு சென்றார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், பன்னீர்செல்வத்துக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதில் பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்