கனடாவை உலுக்கிய வேன் தாக்குதல்தாரி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


கனடா மக்களை நடுங்க வைத்த வேன் தாக்குதல்தாரி, தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் ரொறன்ரோவில் கடந்த 2018ல் நடுங்க வைக்கும் வேன் தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதில் தொடர்புடைய Alek Minassian என்பவர் மீது 10 முதல் நிலை கொலை வழக்கும், 16 கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடி9வடைந்த நிலையில், அவருக்கு பிணையில் வெளிவராத 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூன் 13ம் திகதி விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து ஒன்ராறியோவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவை உலுக்கிய வேன் தாக்குதல்தாரி தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Toronto Van Attack Convicted Files Appeal

அதில் விரிவான விசாரணை தேவை என அவர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த வேன் தாக்குதலில் 8 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயங்களுடன் தப்பினர்.

பெண் ஒருவரால் ஏற்பட்ட கோபம் காரணமாகவும், இணையத்தில் உலவும் தீவிர கருத்துகளால் ஈர்க்கப்பட்டும், நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பரபரப்பான நடைபாதையில் பாதசாரிகள் மீது வாடகை வேனை வேண்டுமென்றே ஓட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவை உலுக்கிய வேன் தாக்குதல்தாரி தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Toronto Van Attack Convicted Files Appeal



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.