நாட்டின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக ,சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உறவினர்கள் கைதிகளை பார்க்க வர முடியாததால், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதிகள் தமது உறவினர்களுடன் தொலைபேசி ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே இந்த வசதிகள் வழங்கப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.