இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.40-ம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை சரிந்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் ஷாபாஸ் குறைத்து உத்தரவிட்டுள்ளார். பதவியேற்றபோது சந்தை விலைக்கேற்ப கனத்த இதயத்துடன் விலையை ஏற்றியதாகவும் ஷாபாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்தார்.
