நாட்டின் 16வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.
நாளை வாக்குப்பதிவுக்காக டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.
எம்.பி.க்களின் வாக்குமதிப்பு (இரு அவைகளும் சேர்த்து) தலா 708 ஆக உள்ளது. எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு 176ஆக உள்ளது. அதன்படி தமிழக மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு பின்வருமாறு:
மொத்த வாக்குகள்
எம்.எல்.ஏக்கள் 234 x 176 – 41,184
எம்.பி. க்கள் 57 × 700 – 39,900 (இரு அவைகளும் சேர்த்து)
மொத்த வாக்குகள் – 81,084
கட்சிகள்
எம்.எல்.ஏ.க்கள் (234)
மக்களவை எம்.பி (39)
மாநிலங்களவை எம்.பி (18)
திமுக
133
24
10
காங்கிரஸ்
18
8
1
விசிக
4
2
0
இந்திய கம்யூ.
2
2
0
மார்க். கம்யூ.
2
2
0
மதிமுக
0
0
1
அஇஅதிமுக
66
1
4
பாமக
5
0
1
பாஜக
4
0
0
த.மா.கா
0
0
1
திமுக கூட்டணியில் உள்ள மொத்த எம்,எல்.ஏக்கள் 133+18+4+2+2 = 159 பேர். எனவே 159×176 = 27,984 வாக்குகள் பதிவாகும்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்களவை எம்.பி.க்கள் 24+8+2+2+ = 38 பேர் ஆவர். இவர்களது வாக்குகள் 38 × 700 = 26,600 ஆகும். மேலும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் 10+1+1 = 12 பேர் ஆவர். இவர்களது வாக்குகள் 12×700 = 8400 ஆகும். ஒட்டுமொத்தமாக எதிர்கட்சிகளின் வேட்பாளருக்கு திமுக கூட்டணி சார்பாக 62,984 வாக்குகள் பதிவாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள மொத்த எம்,எல்.ஏக்கள் 66+5+4 = 75 பேர். எனவே 75×176 = 13,200 வாக்குகள் பதிவாகும்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்களவை எம்.பி. ஒருவர் மட்டுமே. இவரது வாக்குகள் 1×700 = 700 ஆகும். மேலும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 + 1 + 1 = 6 பேர் ஆவர். இவர்களது வாக்குகள் 6×700 = 4200 ஆகும். ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு அதிமுக கூட்டணி சார்பாக 31,300 வாக்குகள் பதிவாக உள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM