திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷகிதா பேகம்.
அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பவர் ஷகிதா பேகத்தின் மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஜோசப் ராஜ், ஷகிதா பேகத்தின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மறைந்து இருந்து ஷகிதா வந்தவுடன் அவர் மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷகிதா பேகத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஷகிதா பேகம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து பொன்மலை காவல்துறையினர் ஜோசப் ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.