மைசூரு : மைசூரிலும் பிரதமர் வருகையின் போது போடப்பட்டிருந்த சாலைகளில், பாதாள சாக்கடை மூடி பெயர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.மைசூரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஜூன் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு வருகை தந்திருந்தார்.
இதற்காக, 23 கோடி ரூபாயில், பெங்களூரு மாநகராட்சி சார்பில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு இருந்தன.ஆனால், பிரதமர் டில்லி சென்ற ஒரு வாரத்தில், புதிதாக போடப்பட்டிருந்த சாலைகள் பெயர்ந்தன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகமும், கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.இந்நிலையில், மைசூரை சேர்ந்த மஞ்சுநாத் ராஜண்ணா என்பவர், டுவிட்டரில், ‘மைசூரில் பிரதமர் பயணித்த காரஞ்சி ஏரி – ஸ்ரீ சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலையில், பாதாள சாக்கடையுடன் சேர்த்து சாலை போடப்பட்டிருந்தது.’
இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து வாகனங்கள் பயணித்ததால், பாதாள சாக்கடையின் மூடி, உள்ளே சென்றுள்ளது’ என வீடியோ மூலம், குறிப்பிட்டுள்ளார். வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியும் வகையில், குச்சி ஒன்றையும் மஞ்சுநாத் ராஜண்ணா நட்டுள்ளார்.பிரதமர், மைசூரு வந்து சென்று ஒரு மாதம் கூட முடியாத நிலையில், புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டிருப்பதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement