பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம்.. EPFO முக்கிய முடிவு..!

மாத சம்பளக்காரர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் பிஎப் கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் பணத்தை EPFO அமைப்பு பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை வட்டியாக அளிக்கிறது. இதில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர EPFO திட்டமிட்டு உள்ளது.

இதனால் பிப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும் வாய்ப்புகள், இதேவேளையில் ஒரு சின்ன ரிஸ்க்-ம் உள்ளது.

கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஜாக்பாட்..!

EPFO அமைப்பு

EPFO அமைப்பு

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO ஒவ்வொரு மாதமும் பெறும் வைப்பு நிதி தொகையை அரசு பத்திரங்கள், அரசு வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீட்டு பிரிவிலும், இதோடு முக்கியமாக பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து வருகிறது. பங்கு முதலீட்டில் செய்யப்படும் முதலீட்டு தொகை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரப்படுகிறது.

முதலீடுகள்

முதலீடுகள்

இந்நிலையில் ஈக்விட்டுகளில் தனது முதலீடுகளை தற்போதைய வரம்பான 15 சதவீதத்தில் இருந்து முதலீட்டு வைப்புத் தொகைகளில் 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு இந்த மாதம் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்படுகிறது.

EPFO ​​டிர்ஸ்டீஸ் கூட்டம்
 

EPFO ​​டிர்ஸ்டீஸ் கூட்டம்

ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள EPFO ​​டிர்ஸ்டீஸ் கூட்டத்தின் போது ஈக்விட்டுகளில் EPFO அமைப்பின் முதலீட்டை உயர்த்தும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈபிஎஃப்ஓ, ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி தொடர்பான திட்டங்களில் முதலீடு 5 முதல் 15 சதவீதம் வரை முதலீடு செய்யலாம்.

20 சதவீதம் வரை உயர்வு

20 சதவீதம் வரை உயர்வு

இந்த வரம்பை 20 சதவீதமாக திருத்துவதற்கான முன்மொழிவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஆலோசனைக் குழுவான நிதி தணிக்கை மற்றும் முதலீட்டுக் குழுவால் (FAIC) சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளது.

 

எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு

எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு

EPFO ஆகஸ்ட் 2015 இல் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (ETFs) முதலீடு செய்யத் தொடங்கியது, அதன் முதலீட்டு வைப்புத் தொகையில் 5 சதவிகிதத்தை பங்கு-இணைக்கப்பட்ட தயாரிப்புகளில் முதலீடு செய்து வந்தது. இது நடப்பு நிதியாண்டில் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரிஸ்க்

ரிஸ்க்

தொழிற்சங்கங்கள் EPFO ​​மூலம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை எதிர்க்கின்றன, ஏனெனில் இவை அரசாங்க உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படவில்லை. மேலும் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பு என்பதால் பாதுகாப்பு குறைவான மற்றும் உறுதியில்லாத முதலீடுகளில் பணத்தை போடுவது ரிஸ்க் தான்.

ஆனால் பங்குகளில் முதலீடு செய்யும் தொகை அதிகரிக்கும் போது கூடுதலான வட்டி வருமானம் உயரும்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இலங்கையை விட இந்தியா மோசம்.!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

EPFO ready to increase investment limit in equities to 20 percent by july 30

EPFO ready to increase the investment limit in equities to 20 percent by july 30 பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம்.. EPFO முக்கிய முடிவு..!

Story first published: Monday, July 18, 2022, 20:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.