'சாமி இல்லேன்னா நான் கோமா தான்' : மனம் திறக்கும் வில்லி நடிகை

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' என்கிற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்வாதி ராயல். ஜீ தமிழுக்கு ஒரு கண்மணியாக வில்லி கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார். சீரியலில் வில்லியாக மிரட்டி வரும் ஸ்வாதி நிஜத்தில் ஒரு பக்தி பழமாக இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமான தகவல். ஸ்வாதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது ஆன்மிக அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ஸ்வாதி, 'நான் நடிக்க வருவதற்கு முன் படித்து முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா ஸ்டேஜூக்கு சென்றுவிட்டேன். என் பெற்றோர் ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு விபூதி வைத்தனர். அதன்பிறகுதான் எனக்கு உடல்நலம் சரியானது. ஷீரடி சாய் பாபா எனக்கு புதுவாழ்க்கையை கொடுத்தார்' என்று கூறியுள்ளார். மேலும், ஸ்வாதி பெங்களூரை சேர்ந்தவர் என்றாலும், சீரியலில் நடிப்பதற்காக சென்னை வருவதற்கு முன்பே மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டு 5 வருடங்கள் வந்துள்ளாராம். இப்போது அவர் வீட்டில் 20 சாய் பாபா சிலைகள் இருக்க, தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அவர்கள் வாழ்வில் கடவுளின் நல்லாசி கிடைக்க வேண்டுமென பாபா சிலைகளை பரிசாக கொடுத்து வருகிறாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.