பேங்க் ஆப் சீனாவின் கிளைகளில் மக்கள் தங்கள் சேமிப்புக்களிடமிருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள வங்கிக் கிளையிலிருந்து பணத்தை எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்காத மக்களை மிரட்டும்வகையில் பீரங்கிகளை சீன ராணுவ தெருக்களில் குவித்துள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து வங்கியைக் காக்கும் வகையில் இந்தநடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கடந்த 1989-ம் ஆண்டு சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் திரளாக திரண்டு போராட்டம் நடத்தினர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதையடுத்து ராணுவத்தினர் அங்கு வரவழைக்கபட்டனர்.
நிலைமை மோசமானதை தொடர்ந்து மாணவர்கள் மீது ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இறந்தனர். சீனா வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இதே போல் தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு வங்கிகளை காப்பதற்காக சீன அரசு பீரங்கிகளை நிறுத்தி வைப்பதற்காக 1989-ம் ஆண்டு நடந்த பீரங்கி தாக்குதலை நினைவு படுத்துவதாக உள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.