புதுடில்லி: வரும் 26ம் தேதியன்று, ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்க இருக்கும் நிலையில், ஏலத்துக்கான ஒத்திகையை, நேற்று துவக்கி உள்ளது, இந்திய தொலைதொடர்புத் துறை. இந்த ஒத்திகை இன்றும் நடைபெற இருப்பதாக, தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏலம் விடப்படும் 5ஜி அலைக்கற்றைகளின் மதிப்பு, 4.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஏலத்தில், ‘ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ மற்றும் ‘அதானி டேட்டா நெட்வொர்க்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
தற்போது புழக்கத்தில் இருக்கும் 4ஜியை விட, 10 மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் 5ஜி இணைப்பு. இந்த வேகத்தின் காரணமாக, புதிய தலைமுறை சேவைகளும், புதிய வணிக மாதிரிகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஏர்டெல்நிறுவனம் அதன் 5ஜி சோதனை முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி பார்த்துவிட்டதாக, அண்மையில் தெரிவித்திருந்தது.இது குறித்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறும்போது, ”நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில், சக்திவாய்ந்த நெட்வொர்க்குடன், 5ஜி இணைப்பை இந்தியாவுக்கு கொண்டு வருவதில், நிறுவனம் முன்னணியில் இருக்கும்,” என தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement