ஐபோன்கள் பல்வேறு வகைகளில் சிறப்பு திறனை வெளிப்படுத்தி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பல நாட்களாக தண்ணீரில் கிடந்த ஐபோன் மீட்டெடுக்கப்பட்ட உடன் மீண்டும் இயங்கியது என்ற ஆச்சரிய செய்தியும் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் ஐபோன் ஒரு ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றி உள்ளது என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஆம் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர் ஒருவர் போர்க்களத்தில் இருந்தபோது அவரது மார்பில் குண்டு பாய்ந்தது. ஆனால் அவரது பையில் இருந்த ஐபோன் அவரது உயிரை காப்பாற்றியுள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறிய 1.56 லட்சம் மக்கள்.. பசி வாட்டுகிறது, பிழைப்புக்காக ‘இதுவும்’ நடக்கிறது..!

புல்லட்டை தடுத்த ஐபோன்
உலகின் முன்னணி சமூக வலைத்தளம் ஒன்றில் சமீபத்தில் வந்த ஒரு செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐபோன் ஒரு புல்லட்டைத் தடுப்பதன் மூலம் ஒரு சிப்பாயின் உயிரை காப்பாற்றியது என்பதுதான் அந்த ஆச்சரிய செய்தி.

உயிரை காப்பாற்றிய ஐபோன்
அந்த பதிவில், ஐபோன் 11 ப்ரோ ஐபோனை உக்ரேனிய வீரர் ஒருவர் வைத்திருந்ததாகவும், அவருடைய உயிரை அந்த ஐபோன் காப்பாற்றியதாகவும் வீடியோ வெளியானது. உக்ரைன் வீரரின் சட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்த போன், அவரை துளைத்த தோட்டாவை தடுத்து சேதத்தை எடுத்து, சிப்பாயின் உயிரை காப்பாற்றியுள்ளது.

ஐபோன் என்ன ஆனது?
வேகமாக வந்த புல்லட்டை தடுத்ததால் ஐபோனின் பின்புறத்தில் உள்ள தங்க நிறத்திலான கண்ணாடி பல துண்டுகளாக உடைந்துவிட்டது. மேலும் இது டிஸ்ப்ளேவும் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இருப்பினும் ஐபோன் வேலை செய்கிறது என்பது இன்னொரு ஆச்சரியம்.

ஐபோன் புல்லட்டை தடுக்குமா?
ஐபோனை சட்டைப்பையில் வைத்திருந்தால் உண்மையில் குண்டு துளைக்காததா? வீரருக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் காப்பாற்றியது உண்மைதானா? என்ற கேள்வியை சமூக வலைத்தள பயனர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். மேலும் புல்லட் எவ்வளவு தூரத்தில் இருந்து, எவ்வளவு வேகத்தில் வந்தது போன்ற கேள்விகளுக்கும் யாரிடமும் பதில் இல்லை.

துருப்பிடிக்காத எஃகு சட்டம்
இருப்பினும், அது உண்மையிலேயே புல்லட்டை கடந்து செல்லாமல் காப்பாற்றியிருந்தால், அது கண்ணாடி பின்புறத்தில் உள்ள துருப்பிடிக்காத எஃகு சட்டத்தின் தரம் மற்றும் கட்டமைப்பு திறமையை காண்பிக்கும் என்று தான் கூறப்பட்டு வருகிறது.
iPhone Saves Life Of Ukrainian Soldier By Blocking Bullet
iPhone Saves Life Of Ukrainian Soldier By Blocking Bullet | உக்ரைன் ராணுவ வீரரை துளைத்த புல்லட்.. உயிரை காப்பாற்றிய ஐபோன்!