டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த விபத்தில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குமரபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தேவையான பொருட்கள் காரமடையில் தயார் செய்யப்பட்டு இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணிகளில் கரூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லாரி ஒட்டுநராக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, அதிகாலை 4 மணிக்கு ஆறுமுகம் லாரியில் தார் கலவை ஏற்றிக் கொண்டு சாலை பணி நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அப்போது, லாரியின் பின்புறம் மின்கம்பத்தில் உரசியது. எதிர்பாராத விதமாக லாரி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதில், சம்பவ இடத்திலேயே ஒட்டுநர் ஆறுமுகன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.