செஸ் ஒலிம்பியாட்: வெளிநாட்டு வீரர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை: மா. சுப்பிரமணியன்

சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போடடிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளவரும் வெளிநாட்டு வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ‘தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படவில்லை. இருப்பினும் மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க: Chess Olympiad 2022: மாமல்லபுரத்தில் இதெல்லாம் மிஸ் பண்ணிராதீங்க!

அதன்படி அருகாமை மாநிலங்களில் இருந்து வருபவர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ள சென்னை வரும் வெளிநாட்டு வீரர்கள் அனைவருக்கும் மருத்தவ பரிசோதனை கட்டாயம்” என்றார்.

இந்தியாவில் முதன் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு கேரளத்தில் மூவருக்கு கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் நபர் ஒருவர் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தற்போது தெலங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இது இன்னமும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பவில்லை.

இந்தியாவில் இதுவரை கேரளத்தில் மூவர், டெல்லியில் ஒருவர் என 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் குறித்து தீவிர கண்காணிக்கப்பட்டுவருகிறது எனத் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.