பறந்த சிக்ஸர்கள்! தோனியின் 17 ஆண்டுகால சாதனையை அடித்து நொறுக்கிய அக்சர் படேல்


மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில், அக்சர் படேல் அதிரடியாக விளையாடி தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ட்ரினிடாடின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த 312 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது ருத்ர தாண்டவம் ஆடிய அக்சர் படேல் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இறுதிவரை களத்தில் நின்ற அவர் 35 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். அவரது ஆட்டத்தினால் இந்திய அணி 49.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.

Axar Patel

PC: Twitter

சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம் தோனியின் முக்கிய சாதனை ஒன்றை அக்சர் படேல் முறியடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் சேஸிங்கின் போது, 7வது இடத்தில் அல்லது அதற்கு அடுத்த இடங்களில் களமிறங்கும் வீரர்கள் அதிக சிக்ஸர்கள் விளாசியதில்லை.

MS Dhoni

PC: Dibyangshu Sarkar / AFP

2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோனி 3 சிக்ஸர்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டில் யூசுப் பதான் இரு முறை 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு, தோனியின் சாதனையை சமன் செய்தார். இந்த நிலையில் தான் அக்சர் படேல் 5 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2வது அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் 27 பந்துகளில் அடித்த அரைசதம் தான், அவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரைசதம் ஆகும்.  

Axar Patel

PC: Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.