பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா? விமர்சித்த பெண்ணுக்கு செம டோஸ் விட்ட குஷ்பூ

உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை குஷ்பூ, விதவிதமான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். குஷ்பூவை ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா எனறு விமசித்ததற்கு குஷ்பூ செம டோஸ் விட்டு விளாசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ, தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். பாஜகவில் இணைந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை குஷ்பூ என்றாலே அவருடைய பூசிய பப்ளியான் தோற்றம்தான் ரசிகர்களுக்கு பிடித்தமானது. குண்டாக இருந்த நடிகை குஷ்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார்.

குஷ்பூ உடல் எடையைக் குறைத்து ஒல்லியான புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். குஷ்பு உடல் எடையைக் குறைத்ததைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒல்லியான தோற்றத்தில் நடிகை குஷ்பு தொடர்ந்து விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி, குஷ்பூ பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களும் நெட்டிசன்களும் குஷ்பூவின் வயது குறைந்துகொண்டே செல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

குஷ்பூ சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரேகா என்பவர், அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால், ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார். இந்த கம்மெண்ட்டால் கோபம் அடைநெத குஷ்பு செம டோஸ் விட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை குஷ்பூ அளித்த பதிலில், “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு” என்று செம டோஸ் விட்டுள்ளார். நடிகை குஷ்பூவின் இந்த பதிவுகு ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரித்து வருவதால் லைக்குகள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.