மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராக பதவி வகித்து வரும் கோபி, ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு நெறியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், ஆராய்ச்சி பாடம் தொடர்பான விளக்கம் அளிப்பதாக கூறி அம்மாணவியை தனது விடுதி அறைக்கு வரவழைத்த கோபி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
தனது உறவினர்களிடம் இது தொடர்பாக மாணவி தெரிவித்த நிலையில், அவர்கள் கோபியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
மாணவி அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்தனர்.