Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற கதைதான். அதனால்தான், அது சுவாரசியமானதாக இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வேறு யாராவது கண்டுபிடிக்கும் முன் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த புதையல் வேட்டையில் 30 நொடிகளுக்குள் பணத்தைக் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க லக்கிதான்.

பணத்தை தேடுவது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். பணத்தை மறைத்து வைத்தால் அது புதையல் ஆகிறது. அதனால், நீங்கள் கண்டுபிடிக்கப்போவது பணத்தைதான் என்றாலும் அது ஒரு வகையில் சிறிய புதையல் வேட்டைதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.இந்த படத்தில் பல தொலைபேசிகள், கம்பிகள் மற்றும் பிற தொழில்நுட்பத் துண்டுகள் மூலம் உங்களைக் குழப்பும். ஆனால், படத்தைச் சரியாகப் பார்த்து, வேறு யாரும் பார்ப்பதற்கு முன் பணத்தைக் கண்டுபிடியுங்கள்.

இந்த படத்தில் செல்போன்கள், தொலைபேசிகள், கூடைகள், கம்பிகள், ஹெட்ஃபோன்கள், ரிமோட்டுகள் ஸ்டெதஸ்கோ போன்றவை இருக்கிறது. இந்த படத்தை பிரிட்டனில் தங்கள் பழைய தொழில்நுட்பத் தயாரிப்புகளை விற்பனை செய்ய மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் படத்தை Music Magpie வெளியிட்டது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட $600 மதிப்பிலான பழைய தொழில்நுட்ப சாதனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படாமல் விடப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த படத்தில் மறைந்திருக்கும் பணத்தை தேடும் போது, உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அனைத்து சாதனங்களையும் நினைத்துப் பாருங்கள்.
உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் இந்தப் படத்ஹ்டில் பணத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நிஜமாகவே நல்ல பார்வையாளர். உங்கள் அறிவாற்றல் திறன்கள் மனதைக் கவரும். பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
பச்சை ஐபாட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்டைலஸ்களுக்கு இடையில், நீங்கள் டாலர்களைத் தேட வேண்டும். அதுதான் பணத்தின் நிறம். மறைத்து வைக்கப்பட்ட பணத்தை 70% மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நாம் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம்.

இந்த படத்தின் நடுப்பகுதியில் இருந்து பணத்தை தேடத் தொடங்கி, பணத்தை எளிதாகக் கண்டுபிடிக்க புதிரைச் சுற்றி உங்கள் கண்களைச் சுழற்றுங்கள். பணத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
பணத்தைத் தேடும் இந்த சிறிய புதையல் வேட்டை ஆப்டிகல் இல்யூஷன் புதிரை ரசிக்க வைக்கும். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்களுக்காக இங்கே பணம் எங்கே இருக்கிறது என்று விடையைத் தருகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”