காண்டமை அதுக்கு பயன்படுத்தாமல் போதை ஏற்றும் வாலிபர்கள்: தண்ணீரில் ஊற வைத்து ஒரு சிப் அடித்தால் 12 மணி நேரம் சும்மா ஜிவ்வ்வ்வ்னு இருக்கும்

‘இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள்’ என்று கூறிவிட்டு சென்றார் மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம். இன்று இந்திய இளைஞர்களின் தேவையை அறிந்து அவர்களை இழுக்க அமெரிக்க முதல் பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகிறது. உலகளவில் முன்னணி நிறுவனங்களான கூகுள், டிவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்களே அலங்கரித்துள்ளனர். நமது உழைப்பின் மூலம் அந்நாடுகள் பொருளாதாரத்தில் உச்சம் கண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் கல்வியை கொண்டு சேர்க்காததுதான். இதனால், குழந்தை தொழிலர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத பெற்றோர்கள், குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு அனுப்புகின்றனர். பலர் கூடா நட்பால் தவறான பாதையில் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் சிறுவர்கள், வாலிபர்கள் இன்று காண்டம் போதைக்கு அடிமையாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் போதைக்காக டாஸ்மாக் கடைகளுக்கும், பார்களுக்கும் தற்போது செல்வதில்லை. மருந்துக் கடைகளை நோக்கித்தான் இன்றைய இளைஞர்கள் பாதை செல்கிறது. அங்கு இருமல் மருந்து, சர்ஜிக்கல் ஸ்பிரிட், தூக்க மாத்திரைகள், மன நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி போதையாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை வாங்கி கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் கலந்து போதை ஏற்று வருகின்றனர். நைட்ராவிட் போன்ற மாத்திரைகளை சாப்பிட்டால் வேறு உலகத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. இதனால், இந்த மாத்திரைகளை கேட்டு பல மருந்துகடைகளில் போதை வாலிபர்கள் தகராறிலும் ஈடுபடுகின்றனர். இந்த மாத்திரைகள் எல்லாம் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், சில மருந்துக்கடை உரிமையாளர்காள் பணத்துக்கு ஆசைப்பட்டு, இளைஞர்களின் எதிர்க்காலத்தை சீரழிக்கின்றனர். உடனே உயிரிழப்புஇதுதவிர, ஆப்டர் ஷேவ், ஸ்னிபிங் க்ளூ (போதை பசை), பெயிண்ட், நெயில் பாலிஷ்  போன்ற பல்வேறு பொருட்கள் மூலம் போதையை ஏற்று வருகிறார்கள். ஆனால், இவை எல்லாம் உயிருக்கு ஆபத்தானவை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதை பயன்படுத்துவதால், மாரடைப்பு வந்து உடனடியாக உயிரிழப்பு ஏற்படும் சூழல் கூட உள்ளது. மதுபானம் அருந்தினால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்பதால், அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்த முயற்சிகளில் வாலிபர்கள், சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். கஞ்சா, கோகைன், அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் மூலம் போதை ஏற்றிய காலம் போய், மருந்து பொருட்கள், கருத்தடை பொருட்கள் மூலம் போதை ஏற்றும் காலத்துக்கு இன்றைய இளம் போதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது விதவிதமான வாசனைகள் கொண்ட காண்டம் மூலம் வாலிபர்கள் போதைக்கு அடிமையாகும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காண்டம் தட்டுப்பாடுகாண்டம் என்பது உடலுறவின்போது கருத்தடைக்காக பயன்படுத்துவது. ஆனால், இதை அதற்காக பயன்படுத்தாமல் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை குடித்து 10-12 மணி நேரம் வரை போதையிலேயே வாலிபர்கள் மிதக்கின்றனர். இந்த விநோத சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள் துர்காபூர் சிட்டி சென்டர், பிதான்நகர், பெனாசிட்டி மற்றும் முச்சிபாரா, சி  மண்டலம், ஏ மண்டலம் போன்ற பகுதிகளில் நறுமண காண்டம்களுக்கு திடீர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. முன்பு ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு மூன்று முதல் நான்கு பாக்கெட் காண்டம்கள் விற்கப்பட்டன. இப்போது ஒரு கடையில் இருந்து ஒரு காட்டன் காண்டம்கள் விற்கப்படுகிறது. எவ்வளவு வாங்கி வைத்தாலும் சில நிமிடங்களில் விற்றது. இதனால், பல மருந்துகடைகளை முற்றுகையிட்டு, மாணவர்கள், சிறுவர்கள், வாலிபர்கள் காண்டம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கடைக்காரர், வாசனை காண்டம் ஏன் அதிகம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். போதையில் இருந்த அந்த நபர் தங்களது போதை ரகசியத்தை போட்டு உடைத்தார். கருத்தடைக்கு அல்ல…‘இந்த காண்டம்களை சூடான நீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை குடித்தால் 10 முதல் 12 மணி நேரம் வரை சும்மா ஜிவ்வ்வ்வ்னு போதை மயக்கத்திலேயே இருப்பார்கள். இதை கருத்தடைகளாக நாங்கள் பயன்படுத்துவதில்லை. போதைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்’ என்று அந்த வாலிபர் கூறியதை கேட்டு கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, மருத்துவ துறை நிபுணர்கள் கூறுகையில், ‘காண்டம்களில் நறுமண கலவைகள் உள்ளன. அது உடைந்து மதுவை உருவாக்குகிறது. இது போதைப்பொருள். காண்டம்களை நீண்ட நேரம் வெந்நீரில் ஊறவைப்பதால், பெரிய கரிம மூலக்கூறுகள் ஆல்கஹாலிக் பொருளாக மாறுவதால் போதை ஏற்படுகிறது,’ என்றார்.  பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் மதுப்பழக்கத்தின் காரணமாகவே அதிகரித்து இருக்கிறது. ஆனால், கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதால் அத்தகைய குற்றங்கள் அதிகரிக்காது. எனவே, கஞ்சா மற்றும் பாங்கு பயன்படுத்துங்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன் பாஜ எம்எல்ஏ தெரிவித்து இருந்தார். இந்த நாடு எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. விஞ்ஞானம் போன்ற பல துறைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், இந்திய வல்லரசு ஆகிவிடும் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், வாலிபர்களின் செயல்களும், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகளும், செயல்பாடுகளும் போதை நாடுகளின் பட்டியலில்தான் நம் நாடு இடம் பிடிக்குமோ என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.