ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பலை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவருமான பங்கஜ்மிஸ்ரா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரிமம் இன்றி இயக்கப்பட்டு வந்த அந்த கப்பல், சட்டவிரோதமாக சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், பாறைகளை கொண்டு செல்ல பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.