Chennai Tamil News: ரூ20 கோடி செலவில் புதுப்பொலிவு பெற இருக்கும் கிண்டி பூங்கா: என்னென்ன புதிய வசதிகள்?

Chennai Tamil News: தமிழக அரசு 20 கோடி ரூபாய் செலவில் கிண்டி தேசிய பூங்காவை புதுப்பிக்கவுள்ளது.

கிண்டி தேசிய பூங்காவின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறியதன்படி, கிண்டி சிறுவர் பூங்கா மட்டும் தான் ஆண்டிற்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

“கிண்டி குழந்தைகள் பூங்காவில் விலங்குகளை அடைக்கும் வசதி, திறந்தவெளி விளையாட்டுப் பகுதிகள், சிற்றுண்டிச்சாலை, குழந்தைகள் வனவிலங்கு நூலகம், இயற்கையை ரசித்தல் மற்றும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்ட வசதிகள் உள்ளிட்ட எல்லாமே மேம்படுத்தப்பட்டிருக்கிறது,” என்று கூறிகிறார்.

20 கோடி மதிப்பீட்டில், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் விலங்குகள் தங்கும் இடங்களை அமைத்து சென்னை கிண்டி தேசிய பூங்காவை மறுவடிவமைப்பு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“இந்தப் பூங்காவில் ஏராளமான மக்களைக் கவரும் வகையில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட வேண்டும். 1,050 பள்ளிகளைச் சேர்ந்த 68,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிண்டி குழந்தைகள் பூங்காவில் ஆண்டுதோறும் வருகைதருகின்றனர், ”என்று சாஹு கூறிகிறார்.

இந்த பூங்கா மினி பிரிவில் இருந்து நடுத்தர வகை உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இந்த பூங்காவில் பல பறவைகள், புள்ளிமான்கள் மற்றும் சில பாலூட்டிகள் உள்ளன.

“இயற்கை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வுக்கான முதன்மை மையமாக உருவெடுக்கவும், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன போன்றவற்றின் பாதுகாப்புக்கான சிறந்த மையமாக செயல்படவும் பூங்காவை மறுவடிவமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது”, என்று சாஹு கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.