வயதுக்கு மரியாதை இல்லையா? முதியவரை காலால் எட்டி உதைத்த போலீஸ் -வெளியான அதிர்ச்சி வீடியோ

மத்தியப் பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை காவலர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை இரக்கமில்லாமல் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சுமார் 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், எழுந்திருக்க முயற்சிக்கும் முதியவரை மீண்டும் மீண்டும் உதைத்து தள்ளுகிறார் அந்த காவலர். மேலும் அந்த முதியவரின் கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று தண்டவாளத்தில் கீழே தொங்கவிட்டபடி முகத்தில் தொடர்ந்து உதைக்கிறார். இந்த வீடியோவை ரயில் ஒன்றின் உள்ளே இருந்து பயணி ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

image
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ரேவா தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pathetic & Horrible
(Jabalpur Station Incidence) pic.twitter.com/JMh356IgXF
— J.J.SaidaiahBabu सैदय्या बाबू సైదయ్యబాబు (@SaidaiahBabuINC) July 29, 2022

இதையும் படிக்க: இளைஞர் கொடூரக் கொலை: மங்களூரில் அடுத்தடுத்து பயங்கரம் – இரு பிரிவினர் இடையே பதற்றம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.