அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ட்ராய் கோஹ்லரின் என்ற 7 வயது சிறுவன் வாஷிங் மெஷினுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தம்பதியினரின் வளர்ப்பு பிள்ளையான ட்ராய் கோஹ்லரை Troy Koehler(7) வியாழன் காலை 5:20 மணியளவில் இருந்து காணவில்லை என பொலிஸாரில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோரிடம் அவர்களது வீட்டில் விசாரணை நடத்திய பொலிஸார், அவர்கள் வழங்கிய தகவலை அடிப்படையாக கொண்டு வீட்டில் சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது ட்ராய் கோஹ்லர் வீட்டு கேரேஜில் உள்ள வாஷிங் மெஷினில் இறந்து கிடந்ததை கண்டனர்.
இதுத் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கவுண்டி ஷெரிப் அலுவலக கொலைப் பிரிவின் லெப்டினன்ட் ராபர்ட் மின்ச்யூ, குழந்தை தானே வாஷிங் மெஷினில் ஏறியதா என்பதும் சிறுவனின் மரணம் தவறான விளையாட்டின் விளைவாக இருந்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை, அதனால் இது குறித்து தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்துவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகின் உயரமான மலையில்…சடலமாக மீட்கப்பட்ட ஆவுஸ்திரேலிய மற்றும் கனேடிய மலையேறிகள்
மேலும் ட்ராய் கோஹ்லர் சலவை இயந்திரத்தால் கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு அதில் வைக்கப்பட்டாரா என்றும் தெளிவாக தெரியவில்லை, ஆனால் அவற்றை கண்டுபிடிக்க விரும்புகிறோம், தற்போது சிறுவனின் பெற்றோரிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மின்ச்யூ தெரிவித்துள்ளார்.