"ஊழல்வாதிகள் பெயர்களை கூறுங்கள்" – கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி க்கு மிதுன் சக்கரவர்த்தி அறிவுரை..!

ஆசிரியர் பணியிட நியமனத்தில் ஊழல் செய்ததாக சில தினங்களுக்கு முன் மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உதவியாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது பண்ணை வீட்டில் பெட்டிகளில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ₹20 கோடிக்கு மேல் பணம் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் அமலாக்கத் துறையினர். மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினர்.

அவரது நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் ₹28 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணமும் ஐந்து கிலோ எடை கொண்ட தங்க வெள்ளி நகைகளும் அமலாக்கத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் பார்த்தா சாட்டர்ஜியின் பணங்கள் என்று அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார். இது பார்த்தா சாட்டர்ஜி க்கு பெரும் சிக்கலை உருவாக்கியது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் பார்த்தா சாட்டர்ஜி அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் பார்த்தா சாட்டர்ஜி பாஜகவை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி ஊழல்வாதிகளின் பெயர்களைக் குறிப்பிடுமாறு கூறியுள்ளார்.

அதில் அவர் “ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பார்த்தா சட்டர்ஜி வெளியிட வேண்டும். எல்லா பணமும் பார்த்தா சட்டர்ஜிக்குரியது என்பதை நான் நம்பவில்லை. வேறொருவருக்கு சொந்தமான பணத்தின் பாதுகாவலராக பார்த்தா சட்டர்ஜி இருந்திருக்க வேண்டும். அவர் இப்போது பேச வேண்டும். அவர் சிறையில் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்று மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்

இது மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.