உக்ரைனில் கொல்லப்பட்டவர்களின் அதிர வைக்கும் எண்ணிக்கை: ஐக்கிய நாடுகள் பகீர் தகவல்!


ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைவது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா தங்களது முழுநீள போர் நடவடிக்கையை உக்ரைன் மீது கடந்த 24ம் திகதி தொடங்கியது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து பெரும்பாலான பெண்கள், குழந்தைகள், முதியோர் என சுமார் 13 மில்லியன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இந்தநிலையில், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை தற்போது வெளியிட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: தைவானுக்கு செல்வது…முற்றிலும் ஆத்திரமுட்டும் செயல்: சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா!

அதனடிப்படையில், போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 5,327 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 7,257 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.    

உக்ரைனில் கொல்லப்பட்டவர்களின் அதிர வைக்கும் எண்ணிக்கை: ஐக்கிய நாடுகள் பகீர் தகவல்! | Un Release Ukraine Civilians Death Number In WarReuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.