ஆன்லைன் சூதாட்டம்: நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசுதான் – மத்திய அமைச்சர்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளிடமே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பதில் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடமளிக்கும் இணையதளங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
Online gaming platforms treated as illegal when game of chance is involved:  MoS IT - BusinessToday
அதே நேரம் ஆன்லைன் சூதாட்டத்தை கண்டுபிடிப்பது, தடுப்பது ஆகிய பொறுப்புகள் மாநில அரசுகளுக்கே இருப்பதாக விளக்கம் அளித்தார். அதற்கான சட்ட விதிகள் அரசியலமைப்பின் அட்டவணைப்படி மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் தான் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.