இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி! நான்கு பில்லியன் சொத்துக்கள் பறிமுதல்


இந்தியாவில் மிகப்பெரிய வாங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட சஞ்சய் சாப்பிரிய மற்றும் அவினாஷ் போசலே ஆகியோரது நான்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எஸ் பேங்க் – திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் மோசடியில் 34,000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய வழக்கில் சஞ்சய் சாப்பிரிய மற்றும் அவினாஷ் போசலே ஆகிய இரண்டு பில்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பில்டர் ஒருவரின் AgustaWestland ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது. புனேவில் உள்ள அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் அந்த ஹெலிகாப்டரை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அமலாக்க இயக்குனரகம் அதிரடி வேட்டையில் இறங்கியதில், சுமார் நான்கு பில்லியன் (415 கோடி) மதிப்புள்ள இருவரது சொத்துக்களையும் கைப்பற்றினர்.

Avinash Bhosale

siasat

அவற்றில் மும்பையில் 116.5 கோடி மதிப்புள்ள நிலம், பெங்களூரில் 115 கோடி மதிப்புள்ள நிலம், 3 கோடி மதிப்புள்ள மற்றோரு பிளாட், 3 கோடி மதிப்புள்ள மூன்று உயர் ரக சொகுசு கார்கள் அடங்கும்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மூலம் மொத்தமாக கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 1,827 கோடியாக உயர்ந்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Sanjay Chabaria

siasat

மேலும், சஞ்சய் சாப்பிரிய அவினாஷ் போசலேவுடன் உடந்தையாக இருந்ததாகவும், அவரது பல்வேறு நிறுவனங்களுக்கு நிதியை திருப்பி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் கடந்த வாரம் சிபிஐ நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான ஓவியங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.