ஈரோடு, மதுரை, நெல்லை-யில் முக ஸ்டாலின் முக்கிய திட்டம் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் லாபம்..?

தமிழ்நாட்டை ஸ்டார்ட்அப் மாநிலமாக மாற்றுவோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று நடந்த ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சார்பில் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து திறந்துவைத்தார்.

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் திடீர் திருப்பம்… மீண்டும் முன்னேறும் ரிஷி சுனக்!

தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பரவலாக்கும் முயற்சி தொடர்ந்து எடுக்கப்படும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறினார்.

மதுரை நெல்லை ஈரோடு

மதுரை நெல்லை ஈரோடு

இந்த நிகழ்ச்சியில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் 2 மாநாடுகள்
 

மேலும் 2 மாநாடுகள்

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த நிதியாண்டின் இறுதியில் மேலும் இரண்டு பெரிய ஸ்டார்ட்அப் மாநாடுகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.50 கோடி

ரூ.50 கோடி

மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம்

தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம்

சென்னை அண்ணா பல்கலையில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம் அமைக்க ரூ.54.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், 25 ஆயிரம் சதுரஅடியில் அமையும் இந்த மையம் உலகத்தரம் மிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிராண்ட் லேப்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மானிய நிதி

மானிய நிதி

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் 31 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொடக்க மானிய நிதியை (டான்சீட்) முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கும் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.55 கோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெண்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெண்கள்

31 ஸ்டார்ட்அப்களில், பெண்கள் 16 ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்கள் என்பது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும். மேலும் 31 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 11 மட்டுமே சென்னையை சேர்ந்தவை என்பதும், மற்ற 20 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மதுரை, நெல்லை, ஈரோடு போன்ற நகரங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamil Nadu Chief Minister Stalin launches 3 startup hubs in Madurai, Nellai, Erode

Tamil Nadu Chief Minister Stalin launches 3 startup hubs in Madurai, Nellai, Erode | தமிழகத்தை ஸ்டார்ட் அப் மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.