இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கோபிநாத் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது தண்டலம் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கோபிநாத் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயம் அடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் மாரிமுத்து காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு.