குரங்கு அம்மை தொற்றில் இருந்து தப்பிக்க சுகாதாரத்துறை கூறும் அறிவுரைகள் என்ன தெரியுமா ..?

உலகில் 78 நாடுகளில் குரங்கு அம்மை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமானவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் குரங்கு அம்மை தொற்று அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்காவில் 70 பேர் அத்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளில் குரங்கு அம்மைக்கு நான்கு பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

சமீபகாலமாக குரங்கு அம்மை தோற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதற்கு பல மருத்துவ நிபுணர்கள் தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்ள மத்திய சுகாதாரத்துறை இன்று வழிகாட்டுஅறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது “குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். இரு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருட்களை பயன்படுத்தக்கூடாது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைத்தல் கூடாது. குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.