சென்னை: எழும்பூர், பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எழும்பூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (5ம் தேதி) காலை 11 மணிக்கு செயற் பொறியாளர் அலுவலகம், எண்.47, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை-12 என்ற முகவரியிலும் பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (5.8.2022) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், பெரம்பூர் 110 கி.வோ செம்பியம் துணை மின்நிலையம் வளாகம், எம்.ஈ.எஸ் ரோடு, சென்னை-11 என்ற முகவரியிலும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
