“சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவைப் போல தைவானை இந்தியா பயன்படுத்தலாம்..!" – சசி தரூர்

அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி மலேசியா, தைவான் உட்பட நான்கு ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யும்விதமாக, கடந்த திங்களன்று தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதில் தைவானைச் சொந்தம் கொண்டாடும் சீனா, நான்சி பெலோசி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவைக் கடுமையாக எச்சரித்தது. இருப்பினும் சீனாவின் எச்சரிக்கைகளை மீறி, நான்சி பெலோசி தைவானுக்குச் சென்று மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டார். கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிகாரி நான்சி பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது.

நான்சி பெலோசி

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “சீனா இந்தியாவிடம் தவறாக நடந்து கொண்டால், தைவானுடனான இந்தியாவின் தொடர்பை மேம்படுத்த, இந்திய அரசு தயாராக இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். ஏனெனில் சீனாவுடன் விளையாடத் தைவானை ஒரு கார்டாகப் பயன்படுத்தலாம். வெளி விவகார அமைச்சகம் அந்த கார்டை விளையாடுவதற்குப் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகள் ஒரே சீனா என்ற கொள்கையை அங்கீகரிக்கின்றன. அதே நேரத்தில், தைவானுடன் தனித்துவமான பொருளாதார உறவுகளையும் பேணுகின்றன.

மோடி

இந்தியாவின் தூதுக்குழு தைவானில் உள்ளது. ஆனால், இந்தியா அதைப் பொருளாதார பிரதிநிதிகள் என்றுதான் குறிப்பிடுகிறது. தற்போது சீனாவைப் பொறுத்தவரை தைவான் என்பது கௌரவம் சார்ந்த விஷயம். அதனால், பெலோசியின் வருகை குறித்து சீனா பெரும் கோபத்திலிருந்தாலும், தைவான்மீதான அமெரிக்காவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையை அது மாற்றாது. அமெரிக்கா – ரஷ்யாவுடனான பனிப்போரின் போது, இந்தியா சற்று தொலைவில் நின்றுகொண்டு, அணிசேரா பாத்திரத்தை வகிக்க முடிந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், நமது தேசிய நலன்கள் என்று வரும்போது இந்தியா உண்மையில் நடுநிலை வகிக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.