தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே மீண்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்த நிலையில் இன்று டாலர் மதிப்பு சற்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
இதே பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தில் காணப்படுகிறது.
எப்படியிருப்பினும் தொடர்ந்து அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அமெரிக்க மேலும் உந்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு.. தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா..?

ஏற்றம் காணலாம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்க இது காரணமாக அமையலாம். இதற்கிடையில் தங்கத்தின் ரெசிஸ்டன்ஸ் லெவல் 1785 – 1790 லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரித்தாலும் இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா பிரச்சனையே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், தாய்வான் பிரச்சனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக இருந்து வருகின்றது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

சிறந்த ஹெட்ஜிங்
பணவீக்கம் ஏற்கனவே 1980-க்கு பிறகு உச்சத்தில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற நிலையே உள்ளது. இது தங்கத்திற்கு இன்னும் ஆதரவாக அமையலாம். ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 5.30
டாலர்கள் குறைந்து, 1784.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை கிட்டதட்ட 1% குறைந்து 19.962 டாலராக குறைந்து காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, 10 கிராமுக்கு,17 ரூபாய் குறைந்து, 51,365 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 235 ரூபாய் குறைந்து, 57,351 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை, வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4802 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 38,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 5239 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,912 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,390 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 60 பைசா குறைந்து. 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,020
மும்பை – ரூ.47,150
டெல்லி – ரூ.47,300
பெங்களூர் – ரூ.47,200
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,020
gold price on 3rd August 2022: Gold prices have eased slightly due to the rally in the dollar
gold price on 3rd August 2022: Gold prices have eased slightly due to the rally in the dollar/தங்கம் விலை எவ்வளவு குறைந்திருக்கு.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு?