தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் ‘பாட்டில் குடிநீர்’ தயாரித்து விற்கப்படும் என்று, அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களில் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன.
ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது திரைப்பட விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது பால் பாக்கெட்டுகள் மீது அரசு விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.