புடினுடைய இரகசிய காதலியால் இனி அவரது பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ய முடியாது… அமெரிக்கா வைத்த ஆப்பு!


ஒரு கட்டத்தில் புடினுடைய இரகசிய காதலி என்று அழைக்கப்படும் ஒரு பெண் மீது கைவைக்க அமெரிக்கா தயங்கியது. அவர் மீது தடைகள் விதித்தால், புடினுடைய நேரடி கோபத்துக்கு ஆளாகக்கூடும் என தயக்கம் காட்டி வந்த அமெரிக்கா, தற்போது அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.

அலினா கபேவா (Alina Kabaeva) என்ற தடகள வீராங்கனைக்கும் ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கும் தவறான உறவு இருப்பதாக நீண்ட காலமாக வதந்திகள் நிலவுகின்றன.

உஸ்பெகிஸ்தான் நாட்டவரான அலீனா, 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவராவார். பின்னர் புடினுடைய கரிசனை அவர் மீது பட, புடினுடைய ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார் அலீனா. ஆனால், கட்சியில் மட்டுமல்ல, புடினுடைய மனதிலும், ஏன் படுக்கையிலும் இடம் கிடைக்க, அவரது பிள்ளைகளுக்கு அவர் தாயானதாக கூறப்படுகிறது.

புடினுடைய இரகசிய காதலியால் இனி அவரது பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ய முடியாது... அமெரிக்கா வைத்த ஆப்பு! | Money Cannot Be Lavishly Spent

Image – thesun

இந்நிலையில், அமெரிக்காவின் வெளிநாட்டவர்களின் சொத்துக்கள் கட்டுப்பாட்டு பெடரல் அலுவலகத்தின் பட்டியலில் அலீனாவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் பொருள் என்னவென்றால், அமெரிக்காவிலுள்ள அலீனாவின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், மற்ற அமெரிக்கர்கள் அவருடன் வர்த்தக ரீதியாக உறவு வைத்துக்கொள்ளவும் தடை விதிக்கப்படும்.

ஆக, உலகப் பணக்காரர்களில் ஒருவர் என கருதப்படும் புடினுடைய சொத்துக்களை இத்தனை ஆண்டுகளாக அனுபவித்துவந்த அலீனா, இனி அவைகளை தன் ஆடம்பரத்துக்காக செலவிட முடியாது!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.