வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய மனுவை விரைவில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியா – இலங்கை இடையே கடல் வழி வர்த்தகம், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் வங்கக் கடலில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது.
![]() |
இந்த வழித்தடத்தில், கடலுக்கு அடியில், ஹிந்துக்களால் புனிதமாக கருதப்படும் ராமர் பாலம் இருப்பதால், இத்திட்டத்தை எதிர்த்து கடந்த 2007ல் பா.ஜ., – மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரி, 2020ல் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.கடந்த மாதம், 13ம் தேதி இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி அவர், நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.அதன்படி, கடந்த, 26ம் தேதி விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் இது குறித்து இன்று குறிப்பிடப்பட்டது. ‘வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், மிக விரைவில் இது விசாரணைக்கு ஏற்கப்படும்’ என, அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement