75,000 ஸ்டார்ட்அப், 7.56 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. இந்தியா வேற வெலல்!

இந்தியாவில் சமீபத்திய காலமாகவே ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகி வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

இந்த நிலையில் தான் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், உணவு மற்றும் பொது விநியோகம் , ஜவுளித்துறை அமைச்சகத்தின் தலைவரான பியூஷ் கோயல், இந்தியா ஸ்டார்ட் அப்களின் வீடாக உள்ளது.

தற்போது இந்தியாவில் 75000 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதன் முலம் 7.46 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!

 75 ஆவது ஆண்டில் 75,000 ஸ்டார்ட்  அப்

75 ஆவது ஆண்டில் 75,000 ஸ்டார்ட் அப்

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் இந்தியா இப்போது 75,000 ஸ்டார்ட் அப்களின் தாயகமாக உள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
ஆரம்பத்தில் 808 நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட 10,000 ஸ்டார்ட் அப்களுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய 156 நாட்களில் 10,000 ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த துறையை சேர்ந்தவை?

எந்தெந்த துறையை சேர்ந்தவை?

இவ்வாறு வரும் ஸ்டார்ட் அப்களில் 49% டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களில் 12% ஐடி சேவையினை வழங்கும் நிறுவனங்களாகவும், 9% ஹெல்தேர் & லைஃப் சயின்ஸ் துறையை சேர்ந்ததாகவும், 5% வணிக சேவையையும், 5% விவசாயத்தினையும் சார்ந்துள்ளன.

வேலை வாய்ப்பும் அதிகரிப்பு
 

வேலை வாய்ப்பும் அதிகரிப்பு

கடந்த ஆண்டுகளில் பார்க்கும்போது வேலைவாய்ப்பானது 110% கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் போது நாட்டில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப்களை வலுப்படுத்த தேவையான சுற்றுசூழல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

வெற்றிகரமான சூழல்

வெற்றிகரமான சூழல்

6 ஆண்டுகளுக்கு பிறகு அப்படியொரு வெற்றிகரமான சூழல் உருவாகியுள்ளது. இன்று அதன் பலனாக இந்தியா ஸ்டார்ட் அப்களின் வீடாக திகழ்கிறது. பற்பல ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இனி வரும் காலங்களிலும் இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India home to 75,000 start ups: Job opportunities for several lakh people: Piyush Goyal

India home to 75,000 start ups: Job opportunities for several lakh people: Piyush Goyal/75,000 ஸ்டார்ட் அப்களின் வீடு இந்தியா தான்.. 7.56 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. இது வேற வெலல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.