அதிரடியாய் மீட்கப்பட்ட செல்போன்கள்..போலீசாரின் நேர்மையை பார்த்து சிலிர்த்து போன பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன ரூ. 25-லட்சம் மதிப்பிலான 211-செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில் அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் உரியவர்களிடம் ஒப்படைத்தார். செல்போனுடன் தவறிய பணம், ஏடிஎம் கார்டுகளையும் முறையாக மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் கைகொடுத்து பாரட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் திருடு போனதாகவும் பணம் ஏடிஎம் கார்டுகள் காணாமல் போனதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்தது. இதனையடுத்து திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை உடனடியாக கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனது நேரடி கண்காணிப்பில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
image
உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் செல்போன்களை அதன் ஐஎம்இ எண் உதவியுடன் எந்த பகுதியில் இயங்கி கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்து திருடியவர்களை கைது செய்ததோடு செல்போன்களையும் மீட்டனர். அந்த வகையில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில் அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலை காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
image
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், காணாமல் போன செல்போன்களை மேற்குவங்கம் வரை சென்று போலீசார் மீட்டுள்ளனர் எனக் கூறி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்ததோடு, அவர்களுக்கு காவல் உதவி ஆப்பின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததோடு அதை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
image
தொடர்ந்து செல்போன்களை உரியவர்களிடம் வழங்கும்போது செல்போன் உறையில் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் சைபர் கிரைம் போலீசார் முறையாக மீட்டு கொடுப்பதைக் கண்ட அவர் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஷம்சுதிர் என்பவரை பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.