சர்வதேச அளவிலான சுற்றுலா துறையானது கொரோனாவின் வருகைக்கு பிறகு மோசமான நிலையை எட்டியுள்ளது. எனினும் தற்போது தான் நிலையானது மாறத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பாரம்பரியம் நிறைந்த, பல்வேறு கலாச்சாரங்கள் நிரம்பிய இந்தியாவினை, அண்டை நாட்டு பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் இந்தியாவின் சுற்றுலா துறையும் இந்த பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறையாக இருந்து வருகின்றது.
இப்படிப்பட்ட சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் ஜெர்மனியானது 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்ய அந்த நாடு திட்டமிட்டுள்ளது.
சத்துணவு திட்டம் உருவானது எப்படி..? முதலில் அறிமுகம் செய்தது யார்..?

சர்வதேச சந்தையில் இந்தியா
நாட்டிலுள்ள ஜெர்மன் தேசிய சுற்றுலா அலுவலகம், இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இந்தியாவில் இருந்து, தனது வணிகத்தில் ஆண்டுக்கு ஆண்டு 214% வளர்ச்சி அதிகரிப்பினைக் கண்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் முதன்மையான 20 சந்தைகளில் இந்தியாவும் உள்ளது. 2019ல் மட்டும் சுமார் 9.6 லட்சம் பயணிகளைப் பெற்றுள்ளது.

அதிகரிக்கலாம்
ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் இருந்து 1.6 லட்சம் பயணிகளை பெற்றுள்ளது. இது 2023ம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு முந்தைய பயணிகளை எட்டும் என்று நம்புவதாகவும் தேசிய சுற்றுலா அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊக்குவிப்பதை நோக்கம்
இது கலச்சார ஆர்வமுள்ள பயணிகள், குடும்பங்கள், இந்தியாவுக்கு விடுமுறைக்கு வருபவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியர்களின் ஐரோப்பிய பயணங்களில் 9%-ம் ஜெர்மனியும், 55% இந்தியா சுற்றுலா பயணிகளும் பொழுதுபோக்கிற்காக ஜெர்மனிக்கு செல்கின்றனர். 38% வணிகத்திற்காகப் பயணம் செய்கின்றனர்.

ஜெர்மனியில் இந்திய மாணவர்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் இருந்து பயணங்கள் மீண்டு வருவதாக, இந்திய ஜெர்மன் தேசிய சுற்றுலா அலுவலகத்தின் இயக்குனர் ரோமித் தியோபிலஸ் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் இந்தியாவைச் சேர்ந்த 70,000 மாணவர்கள் படிக்கின்றனர். எனவே இந்தியாவில் இருந்து வருபவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆக மாணவர்களின் குடும்பங்களும் நாட்டிற்கு வருகை தருகின்றனர். இதனால் எண்ணிக்கையானது அதிகமாக இருக்கும்.
சுற்றுலா துறையில் நிறைய சவால்கள் நிலவி வருகின்றன. இங்கு விசாக்கள் கிடைப்பது சவாலாக உள்ளது.
100 ரூபா எடுக்க போன இடத்தில் 2,700 கோடி.. ஜன் தன் வங்கி கணக்கில் அதிசயம்..!
Germany plans to invest 5 lakh euros in india to promote tourism
Germany plans to invest 5 lakh euros in india to promote tourism/இந்தியாவில் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்யும் ஜெர்மனி.. எதற்காக தெரியுமா?