புதுடெல்லி: கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலைகள் அளிக்கும் கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலைக்கு (எப்ஆர்பி) பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை நேற்று குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தற்போது குவிண்டாலுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.290ஐ, ரூ.305 ஆக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அக்டோபர்-செப்டம்பரில் தொடங்கும் 2022-2023க்கானஆண்டில் வழங்கப்பட உள்ளது. அரசின் இந்த முடிவால் நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகள், அவர்களை சார்ந்தவர்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
