நீங்கள் பீர் குடிப்பதில் விருப்பம் உள்ளவராக இருக்கும் நிலையில் பீர் குடிப்பதையே உங்களுடைய வேலையாக இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
ஆம், ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று பீர் குடிப்பவர்களை வேலைக்கு எடுக்க விண்ணப்பம் செய்யுமாறு அறிவித்துள்ளது.
இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பீர் குடித்து அதன் சுவை மற்றும் தரத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் வேலை. இந்த வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

ஆல்டி சூப்பர் மார்க்கெட்
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்டி என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் பீர் அருந்தும் நபரை பணியமர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் முழுக்க முழுக்க பீர் குடித்து ஜாலியாக இருக்கும் வேலை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.

பீர் குடிக்கும் வேலை
பீர் உள்ளிட்ட பொருட்களை குடித்து அதனை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்பதும் அதில் உள்ள நிறை, குறைகள் ஆகியவற்றை நிறுவனத்திற்கு பகிர வேண்டும் என்பது தான் வேலை. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் பீர் குடிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராகவும், பலவகை பீர்களை ருசித்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

நிறை குறைகள்
இந்த வேலைக்கு பணி நியமனம் செய்யப்படுபவரிடம் பீரின் சுவை, தரம், நிறை, குறைகள் கேட்கப்படும் என்றும் அவர் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான் தரத்தை மேம்படுத்தும் முடிவுகள் செய்யப்படும் என்றும் ஆல்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பாய்வு
மென்மையான கிராஃப்ட் அலெஸ் பீர் முதல் புத்துணர்ச்சியூட்டும் ஐபிஏக்கள் பீர் வகைகள் வரை பணியில் நியமனம் செய்பவர்களுக்கு தரப்படும் என்றும் அனைத்து வகைகளையும் சுவைத்து அவர் மதிப்பாய்வு செய்து தகவல் அளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது குறித்தும் ஆல்டி நிறுவனம் விளக்கமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் பீர் குடித்து ரசிப்பதில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு தகுதி. இந்த தகுதி இருப்பவர்கள் தங்களுடைய அனுபவத்தை மின்னஞ்சலில் விளக்கமாக அனுப்ப வேண்டும். அத்துடன் இந்த வேலையை தன்னால் சிறப்பாக எப்படி செய்ய முடியும் என்பதையும் கோடிட்டு காட்ட வேண்டும்.

சம்பளம் கிடையாது
இருப்பினும் இந்த வேலைக்கு சம்பளம் என பணமாக எதுவும் செலுத்தப்பட மாட்டாது. ஆனால் அதே நேரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் பீர்களை இலவசமாக குடித்துக் கொள்ளலாம் என்பது இந்த பணியில் சேர்பவர்களுக்கான ஜாக்பாட் ஆகும்.

பீர் பிரியர்களுக்கு சரியான வாய்ப்பு
இந்த பணி குறித்து ஆல்டி சூப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குனர் ஜூலி ஆஷ்ஃபீல்ட் அவர்கள் கூறிய போது, ‘நாங்கள் பீர் குடிப்பதில் ஆர்வம் கொண்ட ஒருவரை தேடி வருகிறோம் என்றும் பீர் பிரியர்களுக்கு இது ஒரு சரியான வாய்ப்பு என்றும் விண்ணப்பம் செய்யும் அனைத்து பீர் ரசிகர்களுக்கும் இந்த வேலை கிடைக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கேட்டுள்ளார்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
இந்த வேலையில் சேர விரும்பும் பீர் ரசிகர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் தங்களுடைய நிறுவனத்திற்கு விண்ணப்பங்களை இமெயில் மூலம் அனுப்பலாம் என்றும் தேர்வு செய்யப்படுபவர் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Free beer alert! Supermarket chain Aldi is looking for an official beer taster
Free beer alert! Supermarket chain Aldi is looking for an official beer taster | ‘குடி’மகன்-களுக்கு ஜாக்பாட்.. ஓரே நேரத்தில் ரெண்டு லட்டு..!