தந்தைக்கு விபத்து.. 7 வயது சிறுவன் சோமேட்டோ டெலிவரி.. டிரெண்டிங் வீடியோ..!

7 வயது சிறுவன் காலையில் பள்ளிக்கு சென்று மாலையில் ஜொமைட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணி செய்து கொண்டிருக்கும் வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

7 வயது சிறுவனின் தந்தை ஒரு விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சோமேட்டோ டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார்.

காலையில் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து அதன் பின் வீடு திரும்பும் அந்த சிறுவன், மாலை முதல் இரவு வரை சோமேட்டோவில் பணி புரிந்து வருவதாக கூறும் வீடியோ இணையதளங்கில் டிரெண்ட் ஆகியுள்ளது.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

தந்தைக்கு விபத்து

தந்தைக்கு விபத்து

ராகுல் மிட்டல் என்ற ட்விட்டர் பயனாளி 7 வயது சிறுவன் தனது உணவை டெலிவரி செய்ய வந்தபோது அவர் சிறுவனின் கதையை கேட்கிறார். அப்போது அந்த சிறுவன் தனது தந்தை சமீபத்தில் விபத்துக்குள்ளாகி காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால் குடும்ப வருமானத்திற்காக தான் இந்த பணியை செய்து வருவதாக கூறியுள்ளார்.

பகலில் பள்ளி, இரவில் வேலை

பகலில் பள்ளி, இரவில் வேலை

பகலில் பள்ளிக்கு செல்வதாகவும், மாலை வீட்டுக்கு வந்தவுடன் 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் அந்த சிறுவன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சைக்கிள்
 

சைக்கிள்

ராகுல் மிட்டல் பகிர்ந்த இந்த வீடியோவில் அந்த சிறுவன் ஒரு கையில் உணவு பேக்கேஜ் உடன் இன்னொரு கையில் தொலைபேசி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சைக்கிள் மூலமே சிறுவன் டெலிவரி செய்து வருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

குடும்ப பொறுப்பு

குடும்ப பொறுப்பு

இதனை அடுத்து ராகுல் மிட்டல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்ற இந்த சிறுவனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி இந்த சிறுவனின் தந்தையின் கால் குணமாக நாம் அனைவரும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 ட்விட்டரில் ரெஸ்பான்ஸ்

ட்விட்டரில் ரெஸ்பான்ஸ்

டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பலர் அந்த சிறுவனின் குடும்ப பொறுப்பு தன்மையை பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒருசிலர் இந்த வயதில் அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகத்தை நினைத்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உதவி

உதவி

மேலும் பலர் அந்த சிறுவனின் தந்தையின் விவரங்களை தங்களுக்கு பகிருமாறும், தங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர் இந்த சிறுவனின் வீடியோவுக்கு சோமேட்டோ நிறுவனமும் ரெஸ்பான்ஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மாற்றுத்திறனாளி டெலிவரி பாய்

மாற்றுத்திறனாளி டெலிவரி பாய்

இந்த வீடியோவை அடுத்த சில நாட்களில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளி ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பொறுப்பை ஏற்று கொள்வதற்காக சிறுவர்களும் மாற்றுத்திறனாளிகளும் செய்யும் வேலை குறித்த இந்த பதிவுகள் அனைவருக்குமான ஊக்கமூட்டும் செய்திகளாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After Father’s Accident, 7 Year Old Turns Zomato Delivery Boy and Rides Cycle Till 11 pm

After Father’s Accident, 7 Year Old Turns Zomato Delivery Boy and Rides Cycle Till 11 pm | தந்தைக்கு விபத்து.. 7 வயது சிறுவன் சோமேட்டோ டெலிவரி.. டிரெண்டிங் வீடியோ..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.