"துரதிர்ஷ்டவசமாக நானே நாட்டின் சாலை நுழைவு வரியின் தந்தை!"- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எந்தவித விளம்பரமும் இல்லாமல் நாட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகளே பாராட்டி இருக்கின்றன. நாட்டில் சுங்கச்சாவடிகள் நகர எல்லைக்குள் இருப்பதால், உள்ளூர் மக்கள்கூட வெளியில் சென்று விட்டு வர சாலை நுழைவு வரி செலுத்த வேண்டியிருப்பதாக ராஜ்ய சபையில் உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின்போது கவலை தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இப்பிரச்னை சரி செய்யப்படும். இதற்கு முன்பு ஆட்சியிliருந்த அரசுதான் நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகளை அமைத்தது. இது துரதிர்ஷ்டவசமானது. துரதிர்ஷ்டவசமாக நானே நாட்டின் சாலை நுழைவு வரியின் தந்தையாக இருக்கிறேன்.

நிதின் கட்கரி

நான் மகாராஷ்டிராவில் 1995-99-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, மும்பையிலிருந்து புனே வரை தனியார் மூலம் சாலை அமைத்து அதற்கான செலவை வாகன உரிமையாளர்களிடம் வசூலித்துக்கொள்ள அனுமதி கொடுத்ததன் மூலம், நான் நாட்டின் சாலை நுழைவு வரியின் தந்தையாக இருக்கிறேன்.

புதிய முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும். நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் அல்லது மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. உள்ளூர் மக்கள் நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் 75 கிலோமீட்டர் சாலைக்கான கட்டணத்தைக் கொடுக்கின்றனர். இது மிகவும் தவறு. ஆனால் இந்தப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல. முந்தைய அரசுதான் இதற்குக் காரணம். அதனைச் சரி செய்வோம்!” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியிலிருந்து விலகி 8 ஆண்டுகள் வரை ஆகிவிட்ட நிலையில் இன்னும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முந்தைய அரசுதான் காரணம் என்று கூறுவதை பா.ஜ.க அரசு வழக்கமாகக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.