பிரிட்டன் பிரதமர் தேர்தலில் திடீர் திருப்பம்… மீண்டும் முன்னேறும் ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தபின் அடுத்த பிரிட்டன் பிரதமர் போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர்.

இந்த இருவரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை லிஸ் டிரஸ் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மீண்டும் முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வு கடும் இழுபறியில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ரிஷி சுனக் எடுத்த கடைசி ஆயுதம்.. பிரிட்டன் பிரதமர் போட்டியில் முந்துவாரா..? கடுமையான போட்டி..!

லிஸ் டிரஸ் vs ரிஷி சுனக்

லிஸ் டிரஸ் vs ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து அவருக்கு பதிலாக பிரதமர் வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள வெளியுறவு செயலர் லிஸ் டிரஸ், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கணிப்பின்படி, தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை விட சிறிய அளவில் முன்னணியில் உள்ளார்.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி 807 பேர்களில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அவர்களுக்கு 43% ஆதரவும், லிஸ் டிரஸ் அவர்களுக்கு 48% ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த வித்தியாசம் வரும் நாட்களில் இன்னும் குறைந்தால் ரிஷி சுனக்கிற்கு அடுத்த பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி வாக்கெடுப்பு
 

செப்டம்பர் 5ஆம் தேதி வாக்கெடுப்பு

சுமார் 200,000 கன்சர்வேடிவ் உறுப்பினர்களின் வாக்குகளை சேகரிக்க சுனக் மற்றும் டிரஸ் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். செப்டம்பர் 5 ஆம் தேதி கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்களிக்க உள்ளனர்.

சுனக்- டிரஸ் வாக்குறுதிகள்

சுனக்- டிரஸ் வாக்குறுதிகள்

இந்த தேர்தலில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது என்னவெனில் இருவருமே கொடுக்கும் வரி குறித்த வாக்குறுதிகள் தான். டிரஸ் தான் பதவிக்கு வந்தால் பெரும் வரி குறைப்புக்களை கையாள்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் சுனக், ‘ வரிகளை குறைக்கும் முன் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

கன்சர்வேடிவ் உறுப்பினர்கள்

கன்சர்வேடிவ் உறுப்பினர்கள்

தற்போதைய நிலையில் கன்சர்வேடிவ் உறுப்பினர்களில் 60% க்கும் அதிகமானோர் சுனக்கை விட வரிகள் குறித்து ட்ரஸ் யோசனை சிறப்பாக இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பணவீக்கத்தை சமாளிப்பதற்கும் குடியேற்றத்தை கையாள்வதற்கும் சுனக்கின் திட்டம் சிறப்பானது என்றும் கூறி வருகின்றனர். சுனக் அதிக நம்பிக்கை கொண்டவர் என்றும் கல்வியில் சிறந்த கொள்கைகளை கொண்டிருப்பவர் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடும் போட்டி

கடும் போட்டி

ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும், பிரிட்டனின் முன்னணி வாக்கெடுப்பு நிபுணர்களில் ஒருவருமான ஜான் கர்டிஸ் இதுகுறித்து கூறியபோது, ‘போட்டி இன்னும் முடிந்துவிட்டதாக தெரியவில்லை என்றும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Next UK prime minister, Rishi Sunak closer to Liz Truss

Next UK prime minister, Rishi Sunak closer to Liz Truss | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் திடீர் திருப்பம்… மீண்டும் முன்னேறும் ரிஷி சுனக்!

Story first published: Wednesday, August 3, 2022, 10:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.