புயல்வேகப் பந்துவீச்சில் பறந்த ஸ்டம்புகள்! வைரல் வீடியோ



காமன்வெல்த் தொடரின் பார்படோஸ் வுமன் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த பார்படோஸ் வுமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டீன்ட்ரா டோட்டினையும், ஆலியா அல்லேயனே ஆகியோரை ரேணுகா போல்டாக்கினார்.

அவர்களது விக்கெட்டுகளின்போது ஸ்டாம்புகள் பறந்தன. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

ரேணுகா சிங் 4 ஓவர்களை வீசி 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருமுறை அவர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.