சென்னை: பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் ஆம்னி பேருந்தில் இருந்து 3 பேர் லோடு வாகனத்தில் பார்சல்களை ஏற்றி கொட்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.
